/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.30.50 லட்சம் மோசடியில் தலைமறைவு பெண் கைது
/
ரூ.30.50 லட்சம் மோசடியில் தலைமறைவு பெண் கைது
ADDED : பிப் 13, 2024 12:37 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி, ஒரிச்சேரி புதுார், அண்ணா நகரை சேர்ந்தவர் பூவழகன்; ஈரோட்டை சேர்ந்தவர் மலர்கொடி; கவுந்தப்பாடி, செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி; இவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக, கவுந்தப்பாடி, சலங்கபாளையம், அய்யன்காடு, காரிய குப்பண முதலி வீதியை சேர்ந்த ஜோதிடர்களான அன்பானந்தன், 53, அவர் மனைவி கோகிலாம்பாள், 52, ஆகியோர், 30.50 லட்சம் ரூபாய் பெற்றனர்.
வேலை வாங்கித் தராத நிலையில், பணத்தையும் திருப்பி தராததால், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மூவரும் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் கடந்த ஆண்டு, டிச.,26ல் அன்பானந்தனையும், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியராக பணியாற்றும் அன்பானந்தன் மகள் பவித்ரா, 27, என்பவரை ஜன.,12லும் கைது செய்தனர். தலைமறைவான கோகிலாம்பாளை தேடி வந்த நிலையில், போலீசார் நேற்று கைது செய்தனர்.