ADDED : நவ 10, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை, தீ விபத்தில்லாமல் அமைந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததால் தீக்காயம் ஏற்பட்டதாக யாரும் மருத்துவமனையில் சேரவில்லை. ராக்கெட் பட்டாசால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் இல்லை. விஜயமங்கலத்தில் மட்டும் தற்காலிக பட்டாசு கடையில் நேற்று அதிகாலை மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில்லாத தீபாவளியாக அமைந்ததால் தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
