/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணியாளர்களுக்கு இருக்கை வசதி குறைபாடு; 31 கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ADDED : டிச 06, 2024 07:44 AM
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) விஜயலட்சுமி தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
அனைத்து கடைகள், நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள், பணியிடையே கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதி செய்து தர வேண்டும் என கடந்த, 2021ல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 31 கடைகள், நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.