/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி கோவிலில் அரசு கூடுதல் செயலர் ஆய்வு
/
கொடுமுடி கோவிலில் அரசு கூடுதல் செயலர் ஆய்வு
ADDED : ஜூன் 08, 2025 01:02 AM
ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் குறித்து, அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் நேற்று ஆய்வு செய்தார்.
கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை மேம்பாட்டு வசதிகளுக்காக, 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் உடை மாற்றும் அறை மேம்படுத்துதல், காவிரி படித்துறையில் பக்தர்கள் விட்டு செல்லும் உடைகளை அகற்ற துணி சேகரிக்கும் இடம், தேவையான எண்ணிக்கையில் துாய்மை பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல், திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார். கோவிலை சுற்றி துாய்மையாக, பசுமையாக வைத்து கொள்ள மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கவும், தல விருட்சமான வன்னி மரத்தை திசு வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்து வளர்க்க யோசனை தெரிவித்தார்.