/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரம் கிராம பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
/
தாராபுரம் கிராம பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தாராபுரம் கிராம பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தாராபுரம் கிராம பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2024 04:30 AM
ஈரோடு: ஈரோடு அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து சுங்கம், குமாரபாளையம், குப்புச்சிபாளையம், வரப்பாளையம், தொப்பம்பாளையம், கள்ளிவலசு, கள்ளிப்பாளையம், பொம்மநாயக்கன்பட்டி, அலங்கியம், மணக்கடவு உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக நல்லாம்பாளையம் வரை ஓட்டு சேகரித்தார்.
விவசாய தொழிலாளர்கள், சாலை ஓர வியாபாரிகள், பொதுமக்களிடம் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது:
தாராபுரம் யூனியனுக்கு உட்பட்ட பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் பிற தொழில் வளங்கள் இன்றி, பின் தங்கி உள்ளது. எனவே, இப்பகுதிக்கு ஏற்ற தொழிற்சாலைகளை கொண்டு வரவும், விவசாய விளை பொருட்களை இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது, விற்பனை செய்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி, விற்பனை செய்வதற்கான தொழில் வாய்ப்புகள், அதற்கான கடனுதவிகளை பெற்றுத்தர முகாம் நடத்த நடவடிக்கை எடுப்பேன்.
கிராமப்புற சாலைகளின் தரம் உயர்த்தவும், குடிநீர் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஜல்ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் இணைப்பு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வேன். குறித்த நாட்களுக்கு ஒரு முறை மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகள், கோரிக்கைகளை அறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வேன்.
இவ்வாறு பேசினார்.
ஓட்டு சேகரிப்பில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

