/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்புரவு ஆய்வாளர் மீது அ.தி.மு.க., கவுன்சிலர் புகார்
/
துப்புரவு ஆய்வாளர் மீது அ.தி.மு.க., கவுன்சிலர் புகார்
துப்புரவு ஆய்வாளர் மீது அ.தி.மு.க., கவுன்சிலர் புகார்
துப்புரவு ஆய்வாளர் மீது அ.தி.மு.க., கவுன்சிலர் புகார்
ADDED : பிப் 08, 2024 12:13 PM
அந்தியூர்: அந்தியூர் டவுன் பஞ்., அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றாவது வார்டு கவுன்சிலராக சரஸ்வதி விஸ்வநாதன் உள்ளார். டவுன் பஞ்.,ல் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,சந்திரனிடம் கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் உட்பட அ.தி.மு.க.,வினர் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
ஒன்றாவது வார்டில், கவுன்சிலராகிய நான் தினமும் துப்புரவு, குடிநீர் பிரச்னைகளை வார்டு முழுவதும் சென்று ஆய்வு செய்து வருகிறேன். இப்பகுதியில் நீண்ட நாட்களாக துப்புரவு பணிகள் எதுவும் செய்யாமல், குப்பை தேங்கி கிடப்பதால் கடந்த, 5ல், துப்புரவு ஆய்வாளர் குணசேகரனை நேரில் சந்தித்து, சுத்தம் செய்து தரும்படி கூறினேன். அதற்கு அவர், 'உடனே வந்து வேலை செய்ய முடியாது' என்று சொன்னதுடன் தரக்குறைவாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதே போல் அந்தியூர் டவுன் பஞ்., அலுவலகம் சென்ற கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன், அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம், துப்புரவு ஆய்வாளர் குணசேகரனை இடமாற்றம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் வரும், 12ல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி, அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டு சென்றார்.

