/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 17, 2024 07:26 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள் தொடர்பான தீர்மானத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையிலான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக அவர்கள் பேசுகையில், 'நேதாஜி தினசரி மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியின்போது கட்டப்பட்டது. அப்போது பழைய வியாபாரிகளுக்கு கடை வழங்கப்படும் என்று உறுதி தரப்பட்டது. தற்போது தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. பழைய வியாபாரிகளுக்கே கடைகளை ஒதுக்க வேண்டும்கோரி மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்' என்றனர். தொடர்ந்து, கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்னை குறித்து பேசினர்.
கூட்டத்தில் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: நேதாஜி மார்க்கெட் புதிய வணிக வளாகத்தில் விதிமுறைகளின்படி கடை ஒதுக்கப்படும். சோலாரில் ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட் வளாகம் கட்டப்படுவதால், வியாபாரிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இது அவசர கூட்டம். இதில் தீர்மானங்கள் தொடர்பான கருத்துகளை கூறலாம். சாதாரண கூட்டத்தில் வார்டு சார்ந்த பிரச்னைகளை விவாதிக்கலாம். இவ்வாறு பேசினார்.