/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கட்டண உயர்வை கண்டித்து பவானியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து பவானியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பவானியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பவானியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
பவானி : பவானி, அந்தியூர் பிரிவில் அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்ய முடியாத சூழல் உள்ளது. மத்திய அரசின் நிதி கிடைக்காமல் தமிழக மக்கள் வேதனையை அனுபவிக்கின்-றனர். தமிழக அரசை மத்திய அரசு புறந்தள்ளி இருப்பதை கண்-டிக்கிறேன். இவ்வாறு கூறினார்.பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை வரதராஜ், பவானி நகர செயலர் சீனிவாசன், ஒன்றிய செயலர் தங்கவேல், அம்மாபேட்டை ஒன்றிய செயலர் முனியப்பன், பஞ்சா-யத்து தலைவர்கள் செல்வராஜ், சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.