ADDED : அக் 09, 2026 04:15 AM
ஈரோடு:பாண்டியாறு
- புன்னம்புழா - மாயாறு இணைப்பு திட்ட விவசாயிகள் இயக்க நிர்வாகிகள்
கூட்டம், தலைவர் துளசிமணி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. செயலாளர்
பி.எஸ்.பழனிசாமி, பொருளாளர் துரைசாமி முன்னிலை வகித்தனர்.
நீலகிரி
மலைப்பகுதியில் மழை பெய்து, மழை நீர் கேரளா வழியாக பாண்டியாறு -
புன்னம்புழா ஆறுகள் வழியாக அரபிக்கடலில் சென்று கலக்கிறது. இந்த
ஆறுகள் இரண்டையும் இணைத்து குழாய் வழியாக மாயாற்றில் கொண்டு வந்து
சேர்க்க வேண்டும். அங்கிருந்து வரும் நீரை பவானிசாகர் அணையில் தேக்க
வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்க, 14 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும்.
இந்த
இணைப்பு திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை நிறைவேற்ற
கோரி வரும் நவ.,21ல் பெருந்துறையில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன்
தலைமையில் மாநாடு நடத்த வேண்டும். இதில் கீழ்பவானி பாசனம், கொடிவேரி
பாசனம், காளிங்கராயன் பாசனம், அவிநாசி - அத்திக்கடவு திட்ட
பயன்பாட்டு விவசாயிகளை பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றினர்.
