ADDED : அக் 09, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர்
அணை நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில், கடந்த சில
நாட்களாக மழை கொட்டுகிறது.
இதனால் வனப்பகுதி வழியாக வரும், மாயாறு
மற்றும் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை
நீர்வரத்து, 5,693 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால்,
53.85 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று இரண்டு அடி உயர்ந்து, 55.85
அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 5.9 டி.எம்.சி,யாகவும் இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, 150 கன அடி; கீழ்பவானி
வாய்க்காலில், 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
