ADDED : அக் 09, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தகவல்
பெறும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஈரோடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர்
கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தகவல் பெறுவது
தொடர்பான பதாதைகள், வழிமுறைகள் நோட்டீஸ்களை வழங்கி சென்றனர்.
காளிங்கராயன் விடுதி வரை சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகம்
அடைந்தனர். பேரணியில் எஸ்.பி., கிரண் ஸ்ருதி, கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (பொது) தேன்மொழி, பயிற்சி துணை கலெக்டர் (வருவாய் மற்றும்
பேரிடர் மேலாண்மை துறை) சித்தார்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
