/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா கோலாகலம்
/
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா கோலாகலம்
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா கோலாகலம்
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா கோலாகலம்
ADDED : மே 13, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவிலில், 41வது ஆண்டாக, அக்னி நட்சத்திர விழா நடந்தது. மூன்று நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, முருக பெருமானுக்கு நேற்று காலை சப்த நதி தீர்த்த அபிஷேகம் நடந்தது,
இதை தொடர்ந்து வேதிகார்ச்சனை, 108 கலசாபிஷேகம் மற்றும் ஸத்ரு ஸம்ஹார திரிசதை ஹோமம் நடந்தது. மதியம் மகா தீபாராதனை, உற்சவ மூர்த்தி புறப்பாடு நடந்தது. இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.