/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சரை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
அமைச்சரை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 21, 2025 07:29 AM
ஈரோடு: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் பேசிய, அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் மல்லிகா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, பாலு, ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் வீரகுமார், முன்னாள் மண்டல தலைவர் கேசவ மூர்த்தி, இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம், ஆவின் துணை தலைவர் குணசேகரன், முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன் உள்பட, 2௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட இறுதியில் பொன்முடியின் போட்டோவை மகளிரணியினர் செருப்பால் அடித்தனர். வெயில் சுட்டெரித்ததால் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கட்சியினர் பலர் கடைகளில் முன்புறம் நிழலை தேடி ஒதுங்கினர். காலை, 10:15 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் 10:50 வரை நடந்தது.
வழக்குப்பதிவுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உள்பட, 200 பேர் மீது, முன் அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில், வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

