sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

/

மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு

மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு


ADDED : டிச 28, 2024 02:49 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சென்னையில், மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டதை கண்டித்து, ஈரோட்டில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈரோட்டில், மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்-கூட்டத்தில், கனி மார்க்கெட் அருகே வாரச்சந்தை நடத்த இடம் ஒதுக்கி தருவது, ஈரோடு பஸ் ஸ்டாண்டில், ஸ்மார்ட் சிட்டி திட்-டத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் உள்ள கடை-களை ஏலம் விடுதல் உட்பட, 36 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்-டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் விபரம்:

தி.மு.க., நந்தகோபு: கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், ஏலம் எடுத்து கடை நடத்துவோருக்கே விற்பனை சரியாக நடக்-காத நிலையில், அதன் அருகே வாரச்சந்தை கடைகளுக்கு அனு-மதி வழங்கினால், கடைக்காரர்கள் பாதிக்கப்படுவர். அந்த தீர்மா-னத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

அ.தி.மு.க., சூரம்பட்டி ஜெகதீசன்: அந்த தீர்மானத்தை நிரந்தர-மாக ரத்து செய்ய வேண்டும்.

அ.தி.மு.க., நிர்மலாதேவி: ஆர்.என்.புதுார் மண்டலம் 1 அலுவ-லகத்துக்கு, பொறியாளர்கள் உட்பட எந்த அலுவலரும் வருவ-தில்லை. மனுக்கள், குறைகள் தெரிவிக்க வரும் மக்களுக்கு பதில் கூற ஆள் இல்லை. மங்களதுறை பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

துணை ஆணையர்: ஆர்.என்.புதுார் அலுவலகத்துக்கு அலுவ-லர்கள் பணி செய்ய வருவர். சாலை வசதிக்கு அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம்.

அ.தி.மு.க., தங்கமுத்து: ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், பெரியசேமூர் பகுதி உட்பட பல பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க-வில்லை.

பொறியாளர் விஜயகுமார்: மாநகர பகுதியில் உள்ள, 67 தண்ணீர் தொட்டிகளுக்கும் தானாக நீரேற்றி வெளியேற்றும், ஸ்கேனிங் இயந்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்-பணி முடியும்போது பிரச்னை தீரும்.

அ.தி.மு.க., தங்கமுத்து: அண்ணா பல்கலை கழகத்தில், மாண-விக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பாரபட்ச-மின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்-தனர்.

அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள் நந்தகோபு, தண்டபாணி போன்றோர், 'கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில், 'அண்ணா அடிக்காதீங்க. என்னை விட்டு-விடுங்க...' என அப்பெண் கதறிய சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் மகன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தர்மபுரி அருகே நடந்த பள்ளி மாணவிகள் தீ விபத்து சம்பவத்தில், நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்' என கோஷம் எழுப்பி, அண்ணா பல்கலை சம்பவத்தை நியாயப்படுத்தினர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

'தி.மு.க., கவுன்சிலர்கள்

பங்கேற்க மாட்டோம்'

மாநகராட்சி மண்டல தலைவர் தண்டபாணி பேசியதாவது:

நான் சமீபத்தில் கேரளா சென்றபோது, ஒரு ரயில்வே ஸ்டேஷனில், 'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லும்' என அவர்களது தலைவர் பெயரை உச்சரிக்கும்படி அறிவிப்பு செய்தனர். சென்னை ஸ்டேஷனுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர்., பெயரை வைத்துள்ளனர். அதற்காக அ.தி.மு.க.,வினரை பாராட்டு-கிறேன்

ஈரோடு மாநகராட்சி

வளாகத்தில் உள்ள வசூல் மைய கட்டடத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க, மூன்று ஆண்டாக பல முறை மனு வழங்கி, நேரில் பேசியும் பெயர் வைக்கவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் அந்த கட்டடத்துக்கு கருணாநிதி பெயர் வைக்காவிட்டால், தி.மு.க., கவுன்சிலர்கள் எவரும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us