/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேகத்தால் விபத்தில் சிக்கிய கார் உயிரை காப்பாற்றிய 'ஏர்-பேக்'
/
வேகத்தால் விபத்தில் சிக்கிய கார் உயிரை காப்பாற்றிய 'ஏர்-பேக்'
வேகத்தால் விபத்தில் சிக்கிய கார் உயிரை காப்பாற்றிய 'ஏர்-பேக்'
வேகத்தால் விபத்தில் சிக்கிய கார் உயிரை காப்பாற்றிய 'ஏர்-பேக்'
ADDED : ஜூன் 03, 2025 01:37 AM
பவானி, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பவானி அருகே லட்சுமிநகர் பாலத்தின் அருகே, நேற்று காலை, 9:15 மணியளவில், கியா செல்டாஸ் கார் அதிவேகமாக வந்தது. சாலையோரத்தில் நின்ற ஒரு லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறி சாலைக்கு சென்று நின்றது. சித்தோடு போலீசார் காரில் இருந்தவரை மீட்டு விசாரித்தனர். காரில் 'ஏர்-பேக்குகள்' திறந்து கொண்டதால், சிறு காயமின்றி தப்பினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கிழக்கு காலனி ரங்கராஜ், 54, துணிக்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. ஈரோட்டில் தனியார் பள்ளியில் மகளை விட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. விபத்தால் பைபாஸ் சாலையில், ௪௦ நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.