/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : டிச 30, 2024 02:58 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதுார் அரசு மேல்-நிலைப் பள்ளியின், முன்னாள் மாணவர் சங்கத்தின், 13ம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், 1967--68 மற்றும் 1968-69ல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதல் இரண்டு மூன்று இடம் மற்றும் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாண-விகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் மாண-வர்கள், தாங்கள் படித்த வகுப்பறை, மைதானம், கலையரங்கம் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினர். துணைத் தலைவர் தேவேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கரி வரதராஜன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்-தனர். துணை செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

