ADDED : மே 13, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி :கோபி அருகே பாரியூரில், சவுந்தரநாயகி சமேத அமரபணீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 10ல் துவங்கியது. திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்த நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்ட தேர், பாரியூர், ஆதிநாராயண பெருமாள் கோவில், தேர்வீதி வழியாக மாலை, 6:30 மணிக்கு ராஜகோபுரம் அருகே நிலை சேர்ந்தது.