ADDED : நவ 04, 2025 02:09 AM
ஈரோடு,  கொடுமுடியை சேர்ந்த, 80 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் இரவு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மகள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
சிகிச்சைக்காக சில முயற்சிகளை மேற்கொண்டவர்கள், மருத்துவமனை வளாகத்தில் விட்டுவிட்டு வீடு சென்று விட்டனர். அங்கிருந்த சிலர், அவரை கவனித்து உணவு, டீ வாங்கி கொடுத்தனர். இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தார். இதுபற்றி அறிந்து மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கினர்.
அவரால் பெயர், பிற விபரங்களை தெரிவிக்க இயலவில்லை. இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், முதியவரின் மகளுக்கு தகவல் தெரிவித்து நேற்று மாலை, அவருடன் அனுப்பி வைத்தனர். முதியவர் ஊர், பெயர் விபரம் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

