/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.91.15 லட்சத்தில் திட்டப்பணிஅந்தியூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.91.15 லட்சத்தில் திட்டப்பணிஅந்தியூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.91.15 லட்சத்தில் திட்டப்பணிஅந்தியூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.91.15 லட்சத்தில் திட்டப்பணிஅந்தியூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : அக் 02, 2025 01:45 AM
அந்தியூர்:அம்மாபேட்டை யூனியன், வெள்ளித்திருப்பூர், முரளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணியை, அந்தியூர் தி.மு.க.,-எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். வெள்ளித்திருப்பூர் அருகே, குண்டந்தோட்டம் பகுதியில், எம்.எல்.ஏ., நிதி, 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்கூடம் அமைத்திடவும், வெள்ளித்திருப்பூர் பொரையபாளையத்தில், 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டடத்துக்கும், வெள்ளித்திருப்பூர் அடுத்த மரவாபாளையத்தில், 7.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கவும் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், வெள்ளித்திருப்பூர் அருகே, சென்னம்பட்டி ஜரத்தலில், 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடம், வெள்ளித்திருப்பூர் அருகே, கலர்காடு பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 12.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், அவைத்தலைவர் ஒன்றிய சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.