/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
/
பெருந்துறையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
பெருந்துறையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
பெருந்துறையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ADDED : செப் 16, 2025 02:10 AM
பெருந்துறை, பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரையின், 117வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
விழாவை முன்னிட்டு, பெருந்துறையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பணன் தலைமையில், பெருந்துறை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னிலையில், கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி, பொன்னுதுரை, ஒன்றிய செயலர்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித் ராஜ், விஜயன், மாவட்ட இளைஞர் அணி செயலர் அருணாசலம், நகர செயலர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியன், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மன் சாந்தி ஜெயராஜ், முன்னாள் துணை சேர்மன் உமாமகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.