/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்டிஷன்' பட்டா நிபந்தனை நீக்கப்படும் விவசாயிகளிடம் அந்தியூர் எம்.எல்.ஏ., உறுதி

ADDED : ஆக 05, 2025 01:29 AM
அந்தியூர், ''அந்தியூர் பகுதியில் அனைத்து பிரிவினரின் 'கண்டிஷன்' பட்டா நிபந்தனை, விரைவில் நீக்கப்படும்,'' என்று, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தெரிவித்தார்.
அந்தியூர் தாலுகாவில், 3,500 ஏக்கர், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பி.சி., நிபந்தனைப் பட்டாவில், நிபந்தனையை நீக்க வலியுறுத்தி, 600க்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தியூர் தாசில்தாரிடம் நேற்று மனு வழங்க அலுவலகத்தில் திரண்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு அந்தியூர் தாசில்தார் கவியரசு சென்றுவிட்டார். இதனால் துணை தாசில்தாரிடம் மனு வழங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது. அவரிடம்தான் மனு கொடுப்போம் என்று, விவசாயிகள் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். இதையறிநது அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். விவசாயிகளிடம் அவர் பேசியதாவது;
தாலுாகாவில் அனைத்து பிரிவினரின் நிபந்தனை பட்டா நிலங்களில், நிபந்தனையை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் பேசியுள்ளேன். இது சம்பந்தமாக முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் மனு வழங்கி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசிடம் இருந்து பதிலும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நிபந்தனை பட்டாக்களின் நிபந்தனை நீக்கப்படும். இவ்வாறு கூறினார். இந்நிலையில் அலுவலகம் வந்த தாசில்தார் கவியரசுவிடம், விவசாயிகள் மனுவை வழங்கி சென்றனர்.