/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மது பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு
/
மது பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு
ADDED : அக் 29, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, காசிபாளையம் பகுதி கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில் தனியார் மது பார் திறக்கப்போவதாக அறிந்தோம். அப்பகுதியில்
டாஸ்மாக் கடை இல்லாத நிலையில், பார் திறக்கப்பட்டால், பாதுகாப்பு பிரச்னை
ஏற்படும். இங்கு அதி-கமாக குடியிருப்புகள் உள்ளன. பார் அமையும் இடம் அருகே
விநாயகர் கோவில், சிறிது துாரத்தில் அரசு ஐ.டி.ஐ., செயல்படுகி-றது. இச்சூழலில் மது
பார் திறந்தால், தேவையற்ற பிரச்னை எழும். எனவே அங்கு மது பார் அமைக்க அனுமதி
வழங்கக்கூ-டாது. இவ்வாறு கூறினர்.