காலை உணவு திட்ட சமையலர் பணி நிரந்தரம் கோரி முறையீடு
காலை உணவு திட்ட சமையலர் பணி நிரந்தரம் கோரி முறையீடு
ADDED : ஜூலை 28, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; பெருந்துறை நகராட்சி பகுதியில் செயல்படும் காமராஜர் காலை உணவு திட்டப்பணி சமைய-லர்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது:
அரசு சார்பில், 1 முதல், 5ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் செயல்பட துவங்கியது முதல் நாங்கள் பணி செய்கிறோம். பெருந்துறை நக-ராட்சி பகுதியில் மட்டும், 11 பள்ளிகளில், எங்-களை போன்றோர் பணி செய்கின்றனர். தினமும் எங்களுக்கு, 100 ரூபாய் மட்டும் சம்பளமாக வழங்கப்படுகிறது. மூன்றாண்டாக இப்பணியை தொடர்ந்துள்ளோம்.தற்போது இத்திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தி, புதிய டெண்டர் விடப்படுவதாக அறிந்தோம். புதிய நபர்கள் வரும்போது எங்கள் பணி பாதிக்கும். நீண்ட காலமாக பணி செய்யும் எங்களை நிரந்தரப்படுத்தி, சம்பளத்தை கூடுத-லாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
