/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு
/
சிவன்மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு
ADDED : டிச 06, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காக சிவன்மலை ராஜா கோபுரத்தின் முன் மஹாதீபம் ஏற்ற வசதியாக கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் தீபம் ஏற்ற தீபத்திற்கு திரி மற்றும் எண்ணெய் கொண்டு செல்ல பயன்பட்ட ஏணி சிறிய அளவில் இருந்ததால் தடுமாற்றத்துடன் சென்று வந்தனர்.
வரும் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்ற வசதியாக இரும்பு தடுப்புகளால் ஆன ஏணி தயார் செய்யப்பட்டு கம்பம் இருக்கும் பகுதியில் வைக்கப்படும் பணி நடந்து வருகிறது.