ADDED : செப் 20, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:மூல
நட்சத்திர தினத்தில் அவதரித்த திருப்புகழ் பாடிய
அருணகிரிநாதரின் அவதார நட்சத்திர தின விழா, சென்னிமலை
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி
அவரது சிலைக்கு காலபைரவ அன்பர்கள் சார்பில் மகா அபிஷேகம் நடந்தது.
பிறகு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு
மாதமும் மூல நட்சத்திர தினத்தில் காலை, 10:30 மணிக்கு
முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், கந்த சஷ்டி கவசம்
இயற்றிய பாலதேவராய சுவாமிகளுக்கு இந்த சிறப்பு வழிபாடு தொடர்ந்து
நடத்தப்படுகிறது.
