ADDED : அக் 29, 2026 03:19 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனுார், அரே
பாளையம், ஒங்கல்வாடி உள்ளிட்ட
பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக ஆடு, மாடு, நாய், எருமை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கால் நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்துள்ளது.
பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதையடுத்து, வனத்துறை சார்பில் சிறுத்தை கூண்டில் சிக்கியதாக போட்-டோவை வெளியிட்டு பிடித்து விட்டோம் என்றனர். பிடிபட்ட சிறுத்தையை காட்டவில்லை என குற்றம் சாட்டிய மக்கள், கடந்த 23ம் தேதி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், 500க்கும் மேற்-பட்டோர் சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போதைக்கு சமாதானம் செய்து போராட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் ஆசனுார் டி.எப்.ஓ., யோகேஷ் குமார் கார்க், நாகர்கோவில் அரசு ரப்பர் கழக பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
