/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
/
கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
ADDED : ஆக 07, 2025 01:08 AM
சென்னிமலை, சென்னிமலை பகுதியில் செயல்படும், கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் அமலாக்க துறை உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னிமலை வட்டாரத்தில், 36 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்
களாக இருந்து, நெசவு நெய்து வருகின்றனர். இந்த கைத்தறி கூட்டுறவு சங்கத்தில், விசைத்
தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட போர்வைகள், பெட்ஷீட்கள் உள்ளதா என, ஈரோடு மாவட்ட கைத்தறி ரக கட்டுப்பாட்டு அமலாக்க துறை உதவி இயக்குனர் ஜெயவேல் கணேஷ் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் இருப்பில் உள்ள போர்வை, பெட்ஷீட் ரகங்களை ஆய்வு செய்தனர். மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த விற்பனை விபரங்களையும் கேட்டறிந்தனர்.