/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோழீஸ்வரர் கோவிலில் அதிருத்ர மகா யாகம் துவக்கம்
/
சோழீஸ்வரர் கோவிலில் அதிருத்ர மகா யாகம் துவக்கம்
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
ஈரோடு : ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் சோழீஸ்வரர் கோவிலில், உலக நன்மை, விவசாயிகள் நலன், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டியும், மகா அதிருத்ர யாகம் நேற்று தொடங்கியது.
கோவில் குருக்கள் குருமூர்த்தி சிவாச்சாரியார், அருண்குமார் சிவம் தலைமையில், 150க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், முதல் கால யாக பூஜை செய்தனர். தொடர்ந்து மகா கணபதி பூஜை, ருத்ர பாராயணம், சிவ மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரான சுந்தர்ராஜன், ஹரிபாபு, சோமு, தனபால், தேவராஜ், மணி உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர். மே, 1ம் தேதி வரை இந்த யாகம் நடக்கவுள்ளது. இதில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

