/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
/
நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
ADDED : டிச 24, 2024 07:58 AM
ஈரோடு: உறவினர் அபகரித்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு மாவட்டம் கோபி, வரப்பாளையத்தை சேர்ந்தவர் சின்-னம்மா, 80; நேற்று காலை கலெக்டர் அலுவலக, கூட்ட அறை அருகே மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார், மண்-ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, மூதாட்டியை வெளியே அழைத்து சென்றனர்.
சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷ-னுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறிய-தாவது:
கோபி அருகே துறையம்பாளையம் புதுாரை சேர்ந்த என்னை, வரப்பாளையத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். கணவருக்கு கள்ளிப்பட்டியில், 10 ஏக்கருக்கு மேல் விளைநிலம் உள்ளது. இதில் உறவினரான ஒருவர், வீடு கட்டுவதற்காக, 10 சென்ட் இடம் மட்டும் கேட்டதால், நிலத்தை எழுதி கொடுத்தேன். ஆனால் பத்திரத்தில், 2 ஏக்கர் நிலத்தை எழுதி கொண்டது தற்-போது தான் தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய் துறையின் பல்-வேறு அதிகாரிகளிடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி, தனது நிலத்தை மீட்டுத்-தர வலியுறுத்தி, தீக்குளிக்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மனுவை பெற்ற போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் வழங்-கினர்.