தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கைத்தறி நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

கைத்தறி நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

கைத்தறி நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்


ADDED : செப் 25, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை:மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சேலம் நெசவாளர் சேவை மையம் சார்பில், சென்னிமலை கொங்கு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சேலம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் புகழேந்தி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் பானு, கைத்தறித்துறை கட்டுப்பாட்டு அலுவலர் மரகதம், கோ--ஆப்டெக்ஸ் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் முருகன் மற்றும் சேலம் நெசவாளர் சேவை மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, 120 கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.

சேலம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் புகழேந்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நலனுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். 112 நெசவாளர்களுக்கு கைத்தறி நெசவாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டன. மேலும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கடைப்பிடிக்கப்படும் 'ஸ்வச்சதா பக்வாடா' நிகழ்வின் ஒரு பகுதியாக, முகாமில் பங்கேற்ற அலுவலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் துாய்மை

உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us