ADDED : ஜூலை 21, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் டிஜிட்டல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பை பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
இதில் குடும்ப விபரங்களை, https://se.census.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி, அரசு அலுவ-லர்கள், பணியாளர்கள் பங்கேற்று, காளிங்கராயன் இல்லம் வரை சென்று கலெக்டர் அலுவலகம் அடைந்தனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தேன்மொழி, (வளர்ச்சி) ரமேஷ் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
