/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10,220 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை
/
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10,220 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10,220 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை
ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10,220 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை
ADDED : ஆக 07, 2025 01:30 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, பெருந்துறை வட்டார பகுதியில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தார்.
விதை இருப்பு, விலை விபரம், விதை விற்பனை உரிமம், விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்று, முளைப்பு திறன் அறிக்கை, விற்பனை பட்டியல் விபரங்களை ஆய்வு செய்தார்.
விதை விற்பனை உரிமம், இருப்பு பதிவேட்டில் உள்ள விதை இருப்புக்கும் உண்மை இருப்புக்கும் வேறுபாடு இருந்த விதை குவியல்கள், முளைப்பு திறன் அறிக்கை இல்லாத விதை குவியல்கள், விதை சரியான முறையில் சேமிக்காதது என, 9 எண்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இவை, 10,220 கிலோ எடை கொண்ட, 10.93 லட்சம் ரூபாய் மதிப்பிலானது.
விதை விற்பனை உரிமம் பார்வையில் தெரியும்படி மாட்டி இருக்க வ
ேண்டும். விதை இருப்பு, விதை விபர பலகை தினமும் பராமரிக்க வேண்டும். அனைத்து விதைகளுக்கும் பதிவு சான்று மற்றும் முளைப்பு திறன் அறிக்கையை பராமரிக்க வேண்டும். பதிவு சான்று புதுப்பித்த விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரம், பூச்சி கொல்லி மருந்துடன் விதைகளை சேர்த்து வைக்காமல் தனியாக சேமித்து விற்க வேண்டும்
என, கடைக்காரர்களுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. கோபி விதை ஆய்வாளர் நவீன் உடனிருந்தார்.