/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆறு மாதத்துக்கு பின் வந்த யானைகளால் வாழை சேதம்
/
ஆறு மாதத்துக்கு பின் வந்த யானைகளால் வாழை சேதம்
ADDED : ஜூலை 11, 2025 01:03 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியேறிய இரண்டு யானைகள், புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் நால்ரோடு பகுதியில் நடமாடின.
இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தி காத்திருந்தனர். சிறிது நேரம் நடமாடிய யானைகள் சத்தி-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.
விவசாய நிலங்கள் வழியாக சென்ற யானைகள், வாழை தோட்டத்தில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து, பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆறு மாதங்களுக்கு பிறகு,யானைகள் மீண்டும்,வனப்பகுதியை ஒட்டியுள்ள, கிராமத்துக்குள் புகுந்ததால் விவசாயிகள்
பீதியடைந்துள்ளனர்.