ADDED : பிப் 06, 2026 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
பெருந்துறை சிப்காட் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர் அசோசியேசன் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கோவை-ஐ தராபாத், கோவை - சென்னை இடையே 'ைஹ ஸ்பீடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் காரிடார்' அமைக்க வேண்டும். ஈரோடு மாவட்ட ஜவுளி துறையை ஊக்கப்படுத்த ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மஞ்சள் தரச்சான்றுக்கு வேளாண் பரிசோதனை மையம், ஈரோட்டில் அமைக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள, 150 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளையும் மேற்கொள்ள அனுமக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

