ADDED : பிப் 06, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் பூக்கார தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜேஷ், 34; தாராபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர். கடந்த, 2019 மார்ச் 29ல், தாராபுரம்-பூளவாடி சாலையில் பஜாஜ் பைக்கில் சென்றார்.
அப்போது அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். காயத்துக்கு நஷ்டஈடு கேட்டு தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 1.05 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, 2023 மார்ச் 3ல் உத்தரவிட்டது. போக்குவரத்து நிர்வாகம் வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி சக்திவேல், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி நேற்று மதியம், தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த அரசு பஸ்ஸை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

