/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பவானி செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : டிச 09, 2024 07:36 AM
ஈரோடு: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான, பவானி செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்ய, திருப்பணிக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. ஓராண்டாக புனரமைப்பு பணி நடந்த நிலையில், 20 நாட்களுக்கு முன் இறுதி கட்டத்தை எட்டியது. இரு நாட்களுக்கு முன், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்வான, கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் பவானி எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்துாரி இளங்கோவன், ஒருங்கிணைப்பாளர் பிரபாத் மகேந்திரன் மற்றும் பவானி சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.