/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை
/
பவானிசாகர் யூனியன் அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 03, 2025 01:37 AM
பு.புளியம்பட்டி, பவானிசாகர் யூனியனில், 15 பஞ்.,கள் உள்ளன. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தினக்கூலியாக ரூ.336 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 250 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டிய தொழிலாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட கூலி வழங்க
வேண்டும்,அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை 500க்கும் மேற்பட்ட, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முன்னாள் இ.கம்யூ.,எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில் பவானிசாகர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அடுத்த வாரம் முதல், ஊதிய உயர்வின் படி கூலி வழங்கப்படும் என, பவானிசாகர் பி.டி.ஓ.,இந்திராணி உறுதியளித்ததை தொடர்ந்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.