/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு
/
பவானிசாகர் நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு
ADDED : ஜூன் 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்டம் பில்லுார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீரானது பவானிசாகர் அணைக்கு வந்து சேர்கிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது. நேற்று காலை, 8,438 கன அடியாக இருந்த நிலையில், 15 ஆயிரத்து 629 கன அடியாக மதியம் அதிகரித்தது.
இதனால் அணை நீர்மட்டம், 85 அடியாக உயர்ந்தது. அதாவது இரண்டு நாளில் அணை நீர்மட்டம், 2 அடி வரை உயர்ந்துள்ளது. அணை நீர் இருப்பு, 18.4 டி.எம்.சி.,யாக இருந்தது.