ADDED : செப் 28, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை
அடுத்த கே.டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடம், 46; கிரானைட்
கம்பெனியில் கட்டிங் ஆப்பரேட்டர். கம்பெனி முன் நிறுத்தியிருந்த
இவரது பைக் திருட்டு போனது. புகாரின்படி சத்தி போலீசார் தேடி வந்தனர்.
இது தொடர்பாக கோபி ல.கள்ளிப்பட்டியை சேர்ந்த சந்த்ரு, 25, என்பவரை
கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
