தொடங்கியது திட்டம் தினமும் 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தொடங்கியது திட்டம் தினமும் 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ADDED : செப் 29, 2026 05:22 AM

ஈரோடு; அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலை-யங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் விஜய் நேற்று துவக்கி வைத்தார். இதன்படி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவம-னையில் திட்டத்தை தொடங்கிவைத்து, மருத்து-வமனை உறைவிட மருத்துவர் சசிரேகா கூறிய-தாவது:
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ-மனை வட்டாரத்தில், இம்மருத்துவமனை, திண்டல், பவானி, அம்மாபேட்டை ஆரம்ப சுகா-தார நிலையங்கள், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி அரசு மருத்துவமனை என ஏழு இடங்-களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்கிருந்து தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக இங்கும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனை, கோபி, சத்தி அரசு மருத்துவமனைகளில் மோதிரம் பாதுகாப்பாக வைக்கும் பெட்டகங்கள் உள்ளன.திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட வட்டாரத்தில், 555 குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு நாளைக்கு, 50 மோதிரம் வழங்க திட்டமிட்-டுள்ளோம். அக்.,10க்குள் அனைத்து அழந்தைக-ளுக்கும் வழங்கி விடுவோம். இதற்கிடையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவ்வப்போது மோதிரம் வழங்கப்படும். இதேபோல, அந்தந்த வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும். இவ்-வாறு கூறினார். மருத்துவமனையில் நேற்று, 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.
* கோபி அரசு மருத்துவமனையில், 25 குழந்தை-களுக்கு தங்கம் மோதிரம் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் கல்-யாணி தலைமை வகித்தார். சிறுவலுார் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.
* பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்-துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் விஜய்பாலாஜி, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
தங்க மோதிரம் பெறும் தேதி அறிவிப்பு
ஈரோடு கலெக்டர் கந்தசாமி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூன், 22 முதல் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும், ஒரு கிராம் தங்க மோதிரம் அரசால் வழங்கப்படுகிறது.
இ-கே.ஒய்.சி., பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்ட முகவரி சான்று என, ஆறில் ஒரு சான்றை வழங்கலாம்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் பெருந்துறை வட்டத்தினருக்கு நாளை, சென்னிமலை மற்றும் கோபி அரசு மருத்-துவமனை வட்டாரத்தினருக்கு இன்றும், நாளை; அந்தியூர் வட்டாரத்துக்கு இன்று, அக்.,1, 3; நம்-பியூர் வட்டாரத்துக்கு அக்.,3, 5; டி.என்.பாளையம் வட்டாரத்துக்கு நாளை, அக்.,1ல் பெறலாம்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஈரோடு மாந-கராட்சி பகுதியினர் இன்றும், அக்., 7, 8, 9, 10; மொடக்குறிச்சி வட்டாரத்தினர் இன்று, 30, அக்.,1; பவானி வட்டாரத்துக்கு, அக்., 3, 5, 6; அம்மா-பேட்டை வட்டாரத்துக்கு அக்., 5, 6, 8; ஈரோடு வட்-டாரத்துக்கு அக்., 1, 3; கொடுமுடி வட்டாரத்தினர் அக்., 7ல் பெறலாம்.
தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாள-வாடி வட்டாரத்தினர் இன்றும், சத்தி அரசு மருத்-துவமனையில் சத்தி வட்டாரத்தினர் இன்று, நாளை; பவானிசாகர் வட்டாரத்தினருக்கு இன்று, அக்.,1; கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடம்பூர் பகுதியினருக்கு அக்., 3, 5; பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பர்கூர் பகுதியினர் அக்., 6ல் தங்க மோதிரம் பெறலாம். காலை, 10:00 மற்றும் மதியம், 1:00 மணி என இருவேளைகளில் தலா, 25 பேருக்கு மோதிரம் வழங்கப்படும். இதற்-கான அழைப்பிதழ் கிராம சுகாதார செவிலியர் மூலம் பயனாளிக்கு வழங்கப்படும்.
கூடுதல் விபரத்துக்கு, 73058 99676 என்ற எண்ணில் அறியலாம். இவ்வாறு செய்திக்கு-றிப்பில் தெரிவித்துள்ளார்.
