/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்திய ராணுவத்தை பாராட்டி பா.ஜ., ஊர்வலம்
/
இந்திய ராணுவத்தை பாராட்டி பா.ஜ., ஊர்வலம்
ADDED : மே 24, 2025 01:47 AM
அந்தியூர், மத்திய பா.ஜ., அரசின் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பெற்றதற்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தேசியக்கொடி ஏந்தி அந்தியூரில் நேற்று ஊர்வலம் நடந்தது. ஈரோடு மாவட்ட பா.ஜ., செயலாளர்கள் பற்குணன், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். அந்தியூர் வடக்கு மண்டல தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
பத்ரகாளியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம், சிங்கார வீதி, தேர்வீதி, பர்கூர் ரோடு வழியாக சென்று மீண்டும் கோவில் அருகில் நிறைவடைந்தது. மாநில பா.ஜ., செயற்குழு உறுப்பினர் மோகன்குமார், துணை தலைவர்கள் விஜயக்குமார், உத்திரசாமி, அ.ம.மு.க., மற்றும் பி.எம்.எஸ்., நிர்வாகிகள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.