/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கிய பா.ஜ.,
/
ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கிய பா.ஜ.,
ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கிய பா.ஜ.,
ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கிய பா.ஜ.,
ADDED : ஜன 18, 2024 12:17 PM
ஈரோடு: லோக்சபா தேர்தல் தேதி, நடப்பு பட்ஜெட் கூட்ட தொடருக்கு பின் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கமிஷன் ஏற்கனவே பணிகளை துவங்கி விட்டது. மூன்றாவது முறையாக பா.ஜ., மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, ஈரோடு லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் தேர்தல் பணி துவங்கியுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு
லோக்சபா தொகுதி அமைப்பாளர் பழனிசாமி கூறியதாவது:
ஈரோடு லோக்சபா தொகுதியில், ஒரு வாரத்துக்கு முன்பே தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊடக குழு, அச்சக குழு, உணவு வழங்கும் குழு என, 37 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இடம் பெற்றிருப்பர். இவர்களுக்கான கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளிலும் அமைப்பாளர், இணை அமைப்பாளர், பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி ரீதியாக மையக்குழு அமைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 5 பூத்களுக்கு ஒரு சக்தி கேந்திரம் அமைத்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 1,689 பூத்களில், 1,125 பூத்களுக்கு, 13 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பூத்களில், 5 பேர் கொண்ட பூத் கமிட்டியினர் இருப்பர். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, பயனடைந்த பயனாளிகள் பட்டியலை தயார் செய்து வருகிறோம். இதே போல், முதன்முறை வாக்காளர்களிடம் காணொலி மூலம் வரும், 25ல் பிரதமர் மோடி, கட்சி சார்பின்றி உரையாற்ற உள்ளார்.
அதற்காக முதன்முறை வாக்காளர்களை கண்டறிந்து தயார் செய்ய உள்ளோம். விவசாய அணி, மகளிர் அணி, பட்டியலின அணி உட்பட, 7 அணிகள் உள்ளன. இதில் மகளிர் அணி மாநாடு வரும், 23ல் சென்னிமலை அம்மன் காட்டேஜில் நடத்த உள்ளோம். எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பங்கேற்கிறார். சட்டசபை முகவர்கள் கூட்டத்தை பிப்ரவரியில் நடத்த உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி கொடுத்த வெற்றி உற்சாகத்தால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் தொகுதிகளில், பா.ஜ., சார்பில் தேர்தல் பணி வேகம் எடுத்துள்ளது.