/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புவீடுகளில் கறுப்புக்கொடி, கடையடைப்பு- உண்ணாவிரதம்

ADDED : ஜன 08, 2025 02:44 AM
பவானிசாகர், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லுார் மற்றும் நொச்சிக்குட்டை ஊராட்சிகளை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, அனைத்து கட்சியினர், கடை உரிமையாளர், வியாபாரிகள், விவசாய சங்கம் மற்றும் மக்கள் சார்பில் நேற்று கடையடைப்பு நடந்தது.
இதனால் நல்லுார் ஊராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. பவானிசாகர் சாலை, நேரு நகர், வடக்கு காந்திபுரம், சத்தி சாலைகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.
நல்லுார், நல்லுார் காலனி, பண்ணாடிபுதுார் கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி தலைமையில், தி.மு.க., - அ.தி.மு.க., - இ.கம்யூ., -பா.ஜ.,- த.வெ.க., உள்ளிட்ட கட்சியினர், விவசாயிகள், ஊர் மக்கள், நுாறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கண்ணில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உண்ணா
விரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மக்கள் தெரிவித்தனர்.