ADDED : அக் 19, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு
பெரிய சேமூர் தண்ணீர் பந்தல்பாளையம் சுரேஷ் மனைவி கலைவாணி, 36;
தம்பதியருக்கு, 10 வயதில் மகள் உள்ளார். தம்பதியினர் பார்வையற்ற
மாற்று திறனாளிகள். ரயிலில் பொம்மை, தைலம் பாட்டுபாடி விற்பனை
செய்கின்றனர்.
கலைவாணிக்கு பாபு என்ற பார்வையற்ற மாற்று
திறனாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 13ம் தேதி காலை வீட்டில்
இருந்து மகளுடன் கிளம்பி சென்றார். மாலையில் வருவதாக கூறினார். இரவு
வெகு நேரமாகியும் வரவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில்
தேடியும் மனைவி, மகள் குறித்து தகவல் இல்லை. சுரேஷ் புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
