/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் ரத்த, நீரழிவு நோய் முகாம்

ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
கோபி : கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியின் நாட்டு நல பணி திட்டம், வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லுாரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுவலுார் சார்பாக இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.முகாமை பொறியியல் கல்லுாரி முதல்வர் தங்கவேல் தொடங்கி வைத்து பேசுகையில்,'' அடிக்கடி இது போன்ற பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் வரும் உடல்நல கோளாறுகளை ஆரம்பத்திலேயே சரிபடுத்திவிடலாம்,'' என்றார்.நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கல்லுாரி ஊழியர்கள், 20௦க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் நீரழிவு நோய் பரிசோதனைகளை செய்து தங்கள் உடல் நலம் குறித்து அறிந்து கொண்டனர்.
நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.நர்சிங் கல்லுாரி முதல்வர் முத்துக்கண்ணு, பொறியியல் கல்லுாரி துணை முதல்வர் பிரகாசம், துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் மதன்குமார் செய்திருந்தார்.