நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், 60 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு-சேலம் மாவட்டம் இடையே, நெரிஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றில் இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது.
காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கிய பிறகே, படகு போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் ஆறாவது முறையாக, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

