ADDED : மார் 05, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள குரும்பபாளையம் காலனியை சேர்ந்தவர் தனபால், 26; கட்டட தொழிலாளி. திருமணமாகாதவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற தனபால் வீட்டுக்கு வரவில்லை.
நேற்று மதியம் குரும்பபாளையம் காலனி அருகேயுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்ற கோணத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.