ADDED : அக் 31, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட வார்ப்பிங் மற்றும் சைசிங் தொழிலாளர் சங்கத்துக்கும்,
தமிழ்நாடு சைசிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்கம் - ஈரோடு வட்டார
தலைமைக்கும் இடையே தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த ஓராண்டில் பெற்ற மொத்த
சம்பள தொகையில், 12.5 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதில் 'லே ஆப்' சம்பளத்தையும் சேர்த்து கணக்கிடுவது, அரசு விடுமுறை
நாட்களில் சம்பளத்தை கழித்து கொள்ளவும் ஒப்பு கொண்டனர். போனஸ்
தொகையை வரும், 6ம் தேதி வழங்கவும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
