ADDED : நவ 15, 2026 06:50 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை சார்பில், 59வது தேசிய நுாலக வார விழாவையொட்டி, மாவட்ட மைய நுாலகத்தில், புத்தக கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
அதில், வாசகர் வட்ட தலைவர் சங்கர், புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், வருமான வரித்துறை ஆய்வாளர் கார்த்திக், மாவட்ட மைய முதல்நிலை நுாலகர் அபிராமசுந்தரி, நுாலகர் சுகன்யா உள்பட, பலர் பங்கேற்றனர்.
