தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உறவுக்கார இளம்பெண் வீட்டில் 'பழகிய' வாலிபர் தற்கொலை

உறவுக்கார இளம்பெண் வீட்டில் 'பழகிய' வாலிபர் தற்கொலை

உறவுக்கார இளம்பெண் வீட்டில் 'பழகிய' வாலிபர் தற்கொலை


ADDED : நவ 15, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:கடம்பூர்மலை இருட்டிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன். நான்காண்டுகளாக சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இவரின் மகன் அருண்குமார், 21; சமையல் வேலைக்கு சென்று வந்தார். உறவினரின் மகள் சரிதா, திருமணமாகி கணவரை பிரிந்து ராஜன்நகர் பகுதியில் வசித்துக்கொண்டு சமையல் வேலைக்கு சென்றார். அவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் போனிலும் நேரிலும் பேசி பழகி வந்தனர். இந்நிலையில் தன்னுடன் பழக வேண்டாம் என சரிதா கூறியுள்ளார். ராஜன்நகரிலுள்ள சரிதா வீட்டுக்கு அருண்குமார் நேற்று அதிகாலை சென்றுள்ளார். அவர் இல்லாத நிலையில், அங்கு கொடியில் கிடந்த சரிதா சேலையை எடுத்து துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us